நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி
[ad_1]
பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (73). இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், பெங்காலி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு தமிழில் ஆதி நடித்த ‘யாகவரையும் நாகாக்க’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
கொல்கத்தாவை சேர்ந்த இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது மகன் மகாக்ஷய் சக்ரவர்த்தி கூறும்போது, “அப்பா நலமாக உள்ளார். அவருக்கு வழக்கமான பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது,” என்றார்.
[ad_2]