devotional

ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி திருவிழா: செப்., 17ல் கொடியேற்றம்

[ad_1]

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் வெங்கடாசலபதி சுவாமி கோயிலில் புரட்டாசி மாத திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

18ம் தேதி முதல் 26ம் தேதி வரை பெருமாள் தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 25ம் தேதி காலை நடக்கிறது.

அதேபோல், 26ம் தேதி மூலவர் திருமஞ்சனம், சப்தாவரணம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *