திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் சுவாமி பச்சி சார்த்தி வீதி உலா
[ad_1]
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தன.
அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை பட்டு உடுத்தி, வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சார்த்திய கோலத்தில் எழுந்தருளி வெங்கு பாஷா மண்டபத்தில் இருந்து சிவன் கோயில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சார்த்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
மதியம் 12.05 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்மன், பச்சைப் பட்டு உடுத்தி, பச்சை நிறக் கடாசல் சப்பரத்தில், பச்சைப் புஷ்ப அலங்காரத்தில், பச்சை சார்த்திக் கோலத்தில் வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் பச்சை பட்டு சார்த்தி வழிபட்டனர். ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (13ம் தேதி) காலை 6 மணிக்கு நடக்கிறது.
அங்குள்ள அகத்தியப் பெருமான் கோவிலில் ஆவணி திருவிழா பச்சை சார்த்தியை முன்னிட்டு அகத்தியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பொதிகை ஊராட்சி சார்பில் ஸ்ரீமங்கலகுண கல்யாண விநாயகர் கோயில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
[ad_2]