மதுரை அழகர் கோயில் சோலைமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
[ad_1]
மதுரை: மதுரை அழகர் கோயிலில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்த ஷஷ்டி விழாவின் 7ஆம் நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை அழகர் கோயில் உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்த ஷஷ்டி விழா கடந்த நவம்பர் 13ஆம் தேதி சுவாமிக்கு பலகை கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை நடந்தது. அன்னம், காமதேனு, யானை, ஆட்டுகிடை, சப்பரம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு கோயில் உள் பிரகாரத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது.
விழாவின் 7ம் நாளான நேற்று காலை 11.15 மணிக்கு உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தேவசேனா ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதன்பின் பாலகத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
இன்று மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் எம்.ராமசாமி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
[ad_2]