அடுத்த மாதம் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?
[ad_1]
ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்தார். தம்பதிகள் பேசினர். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி இருவரும் வெளிப்படையாக பேசாவிட்டாலும், இது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளியை ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் ராஷ்மிகா கொண்டாடியதாகவும் கூறப்பட்டது.
கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. ஆனால், இது உண்மையிலேயே சிறப்பானது. விரைவில் அறிவிப்பேன்’ என்று கூறி ஆணும் பெண்ணும் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தை விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளதாகவும் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை விஜய் தேவரகொண்டா மறுத்துள்ளார்
[ad_2]