அயலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | Ayalaan movie making video released
[ad_1]
அயலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது
19 ஜனவரி, 2024 – 12:43 IST

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அயலான். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரைக்கு வந்துள்ளது. வேற்றுகிரகவாசிகளை மையமாகக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்டு இது வெளிவந்துள்ளது. ஹாலிவுட் படங்களைப் போல கொடூரமான இமேஜில் இல்லாமல் குழந்தைகளைக் கவரும் வகையில் சிறிய வேற்றுகிரகவாசியை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் ரவிக்குமார். இந்நிலையில் அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. 20 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் படத்தயாரிப்பு, கிராபிக்ஸ் பணிகள், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல விஷயங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
[ad_2]