cinema

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நடிகர் ரஜினிக்கு நேரில் அழைப்பு

[ad_1]

சென்னை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர். அன்று மதியம் 12.45 மணிக்கு கோவிலின் கருவறையில் ராமர் சிலை வைக்கப்படுகிறது.

“ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் மற்றொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, நாட்டின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழகத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கும் பணியை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நேற்று வழங்கினர். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத்தனர்.

அதன்பின் ஆர்எஸ்எஸ் சென்னை மாநகர தலைவர் சந்திரசேகர், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஆகியோர் குடும்பத்தினருடன் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று கும்பாபிஷேக விழா அழைப்பிதழை கவர்னர் ஆர்.என்.ரவியிடம் வழங்கி விழாவில் பங்கேற்க அழைத்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை ஈசிஆரில் உள்ள பனையூரில் உள்ள தனது வீட்டின் அருகே வசிப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று அழைப்பிதழ்களை வழங்கினார்.

இந்நிலையில், அயோத்தி – ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில் குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அழைப்பிதழ்களை வழங்கினர். அழைப்பிதழைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்த், கண்டிப்பாக குடும்பத்துடன் வருவேன் என்றும், நிகழ்ச்சியில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் உறுதி செய்ததாக கூறப்படுகிறது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *