அரசியல் உள்நோக்கம் கொண்ட படங்களில் நடிக்க மாட்டேன் : பிரித்விராஜ் | Will not act in films with political motives: Prithviraj
[ad_1]
அரசியல் உள்நோக்கம் கொண்ட படங்களில் நடிக்க மாட்டேன்: பிருத்விராஜ்
06 ஜனவரி, 2024 – 18:45 IST
மலையாள நடிகர் பிருத்விராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். அதையடுத்து ப்ரோ டாடி படத்தை இயக்கிய பிருத்விராஜ் விரைவில் லூசிஃபர் இரண்டாம் பாகத்தை தொடங்கவுள்ளார். பிருத்விராஜ் தனது முதல் படத்திலேயே குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியலை மையமாக கொண்ட கதையை தேர்வு செய்திருந்தார்.
அதேபோல், இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ஜன கன மன, குருடி அனகா ஆகிய அரசியல் நாடகங்களிலும் பிருத்விராஜ் நடித்திருந்தார். இதையடுத்து சில இயக்குனர்கள் இயக்கும் அரசியல் படங்களில் நடிக்க அழைத்தபோது, அந்த படங்களில் நடிக்க பிருத்விராஜ் மறுத்துவிட்டார்.
சமீபத்தில், பிருத்விராஜ், “அரசியல் பின்னணியிலான படங்களை இயக்குவதிலும், நடிப்பதிலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே சமயம் அரசியல் உள்நோக்கத்துடன் ஒரு கட்சியை குறிவைத்து தாக்கும் படங்களில் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது படமான லூசிஃபர் மற்றும் ஜன கன மன ஆகியவை பொதுவான அரசியல் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவை.
[ad_2]