cinema

அவதூறு வழக்குக்கு தடை கோரி கங்கனா ரனாவத் மனு

[ad_1]

மும்பை: நடிகை கங்கனா ரணாவத்தும், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் இணைந்து ‘கிரிஷ் 3’ படத்தில் நடித்துள்ளனர். அப்போது இருவரும் காதலித்து வந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் கூறப்பட்டது. இந்த சர்ச்சையில் கங்கனாவை காதலிக்கவில்லை என ஹிருத்திக் மறுத்திருந்தார். இருவரும் மாறி மாறி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், 2020ல் ஒரு சேனலுக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத், இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதை எதிர்த்து ஜாவேத் அக்தர் மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *