ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர் படத்தில் விஜய் 69 : விரைவில் அறிவிப்பு | Vijay 69 in RRR producers film: Announcement soon
[ad_1]
‘RRR’ தயாரிப்பாளரின் படத்தில் விஜய் 69: விரைவில் அறிவிப்பு
31 ஜனவரி, 2024 – 10:38 IST
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தெலுங்கில் டிவிவி தனையா தயாரித்தார். விஜய்யின் 69வது படத்தை தயாரிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் அதனால் விஜய் நடிப்பது உறுதி என்றும் டோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாகவும், படத்தின் இயக்குனர் யார் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஜய் 69 படத்தின் வேலைகள் தொடங்கலாம். இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்னும் இரண்டு வருடங்களில் நடிப்பை விட்டு விலகுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
[ad_2]