cinema

“இது ஒரு ரோலர் கோஸ்டர் பயணம்” – சினிமாவில் 28 ஆண்டுகள் குறித்து கிச்சா சுதீப் நெகிழ்ச்சி

[ad_1]

பெங்களூர்: திரையுலகில் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப் தனது ரசிகர்களுக்கு உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்துள்ளார்.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். 1997 ஆம் ஆண்டு வெளியான ‘தயவ்வா’ திரைப்படத்தில் துணை நடிகராக சினிமாவில் நுழைந்த அவர், பின்னர் அஜித் நடித்த ‘வாலி’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2021ல் ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார் சுதீப். 2015ல் விஜய் நடித்த புலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில், சினிமாவில் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சுதீப், இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த அற்புதமான பொழுதுபோக்கு துறையில் 28 ஆண்டுகள் எனது வாழ்வின் மிக அழகான காலகட்டம். இந்த விலைமதிப்பற்ற பரிசுக்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். எனது பெற்றோர்கள், குடும்பத்தினர், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், எனது சக நடிகர்கள், ஊடகங்கள், பொழுதுபோக்கு சேனல்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இந்தப் பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.

எனது வாழ்க்கையில் எனது மிகப்பெரிய சொத்தாக இருக்கும் மற்றும் எப்போதும் என்னை நிபந்தனையின்றி நேசித்த எனது நண்பர்களை ரசிகர்களின் வடிவத்தில் கட்டிப்பிடிக்கிறேன். அவர்களுக்கு என் அன்பு.

இது ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போன்றது. அதன் ஒவ்வொரு துளியையும் ரசித்திருக்கிறேன். நான் குறைகள் இல்லாமல் இல்லை. நானும் சரியானவன் அல்ல. வாய்ப்பு கிடைக்கும் போது என்னால் முடிந்த முயற்சியை கொடுத்துள்ளேன். நான் யார் என்பதற்காக என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு கிச்சா சுதீப் கூறியுள்ளார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *