cinema

இத்தனை நாளாய் இதை மறைத்திருக்கிறாய்…! பிரபல வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் மனைவியின் வளைகாப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது…! வெளியான புகைப்படங்கள்…! – தமிழன்மீடியா.நெட் – NewsTamila.com

[ad_1]

தமிழ் திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். ஆரம்பத்தில் பாரமவுண்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

அதன் பிறகு சினிமா மோகத்தால் ஊடகத்துறையில் நுழைந்தார். பின்னர் தமிழில் சூர்யா பிரபாகரன் இயக்கிய தா படத்தில் நடித்தார். இது அவருக்கு முதல் படம். இதே படத்திற்காக நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை வென்றார்.

இதையடுத்து ராதா மோகன் இயக்கத்தில் கௌரவம் படத்தில் நடித்தார். அதன் பிறகு சூர்யா பிரபாகரன் அவரை இயக்குனர் சுசீந்திரனிடம் சிபாரிசு செய்தார்.

பின் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் பாண்டிய நாடு படத்தில் ஹரிஷ் உத்தமன் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து நாடு, தனி ஒருவன், பாயும் புலி, றெக்க, சீரி, பைரவா, டோரா என பல சூப்பர் ஹிட் படங்களில் வில்லனாகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் படங்களில் பிரபலமாக இருந்தாலும் இவரது பூர்வீகம் கேரளா.

நடிகர் ஹரிஷ் உத்தமன் ஏற்கனவே ஒப்பனை கலைஞர் அம்ரிதாவை 2018 இல் திருமணம் செய்து கொண்டார். அவர் மும்பையைச் சேர்ந்தவர்.

ஆனால், திருமணமாகி ஒரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டனர். இதையடுத்து மலையாள நடிகை சின்னு குருவிலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சின்னு குருவிலா ஒரு மலையாள நடிகை. படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற ஃபகத் பாசில் நடித்த ‘நார்த் 24 கதம்’ படத்திலும், மம்முட்டியின் ‘கசாபா’ படத்திலும் நடித்து பிரபலமானவர்.

தற்போது நடிகை சின்னு குருவில்லா கர்ப்பமாக உள்ளார். இவரது வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *