cinema

இந்தியத் தீவுகளுக்கு பதிலாக ‘மாலத்தீவு’ புகைப்படம்: ரன்வீர் சிங் ‘சம்பவம்’ வைரல்

[ad_1]

மும்பை: மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் லட்சத்தீவை புகழ்ந்தும், மாலத்தீவை புறக்கணித்தும் வருகின்றனர். ரன்வீர் சிங் செய்த ஒரு ‘சம்பவம்’ வைரலாகி வருகிறது.

மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பிறகு பல பாலிவுட் பிரபலங்கள் லட்சத்தீவுக்கு ஆதரவாக முன்வந்தனர். குறிப்பாக அக்ஷய் குமார், கங்கனா ரனாவத், சல்மான் கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் லட்சத்தீவுகளின் அழகை தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் ரசித்துள்ளனர். மேலும் ‘மாலத்தீவுகளை புறக்கணிப்போம்’ என்ற ஹேஷ்டேக்கும் இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் நடிகர் ரன்வீர் சிங்கும் தனது பங்கிற்கு இந்திய தீவுகளை பாராட்டி இருந்தார்.

ரன்பீர் தனது பதிவில், “2024 ஆம் ஆண்டை நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று நமது கலாச்சாரத்தை அனுபவிப்போம். நம் நாட்டில் பார்க்க நிறைய இருக்கிறது. #exploreindianislands” என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த பதிவில் இந்திய தீவுகளின் புகைப்படத்திற்கு பதிலாக மாலத்தீவு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், “இந்திய தீவுகளை பிரபலப்படுத்துவதாக கூறி மாலத்தீவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளீர்கள். என்ன நடந்தது ரன்வீர்?” என்று கேட்டிருந்தார்.ரண்வீர் உடனடியாக அந்த புகைப்படத்தை பதிவில் இருந்து நீக்கிவிட்டார்.ஆனால், அதன் ஸ்கிரீன்ஷாட்கள் வைரலாகி வருகிறது.

பின்னணி: பிரதமர் நரேந்திர மோடி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணம் லட்சத்தீவு தீவு சென்றிருந்த அவர் பயணத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. பிரதமர் மோடியின் பயணம் குறித்து, மாலத்தீவு இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைதளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவுக்குப் பதிலாக, இந்தியாவின் லட்சத்தீவுகளை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற முயற்சிக்கிறார். மாலத்தீவை குறிவைக்கிறது.”

மாலத்தீவு இளைஞர் நலன், தகவல் மற்றும் கலைத்துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி மோசமானவர் என்றும், இஸ்ரேலின் ஊதுகுழல் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். மாலத்தீவின் இளைஞர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் மல்ஷா ஷெரீப், சமூக ஊடகப் பதிவில் விமர்சித்துள்ளார். இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ‘மாலத்தீவுகளை புறக்கணிப்போம்’ என்ற ஹேஷ்டேக் மற்றும் லட்சத்தீவுகளை பாராட்டி பதிவுகள் வைரலானது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு லட்சத்தீவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *