இந்த ஆண்டில் ‛புதுப்பேட்டை 2 : செல்வராகவனின் எதிர்பார்ப்பு | Pudhupettai 2 will happen this year : Selvaragavan expectations
[ad_1]
இந்த ஆண்டு ‘புதுப்பேட்டை 2’: செல்வராகவனின் எதிர்பார்ப்பு
07 பிப்ரவரி, 2024 – 11:44 IST

இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் ‘புதுப்பேட்டை’.யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தக் காலக்கட்டத்தில் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், பின்னர் இந்தப் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
புதுப்பேட்டை 2ம் பாகம் உருவாகும் என கடந்த சில வருடங்களாக செல்வராகவன், தனுஷ் இருவரும் கூறி வந்தனர். ஆனால், இது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று செல்வராகவன் திடீரென தனது எக்ஸ் இணையதளத்தில், “புதுப்பேட்டை 2 இந்த ஆண்டு உருவாகும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வராகவன் சொன்னது இந்த வருடம் நடக்கும் என்று நம்புவோம்.
[ad_2]