cinema

இன்று நடந்த தெறி ஹிந்தி ரீமேக் பூஜை | theri hindi remake pooja ceremony

[ad_1]

‘தெறி’ ஹிந்தி ரீமேக் பூஜை இன்று நடந்தது

14 ஜனவரி, 2024 – 17:30 IST

எழுத்துரு அளவு:


தெறி-ஹிந்தி-ரீமேக்-பூஜை-விழா

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘தெறி’. இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளியாகின. இன்று பூஜை நடத்தி படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியாவும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். காளீஸ்வரன் இயக்கிய இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்றைய பூஜையில் அனைவரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ரகு தத்தா’ படத்தின் டீசரில் ஒரு டயலாக் பேசியிருந்தார். இவர் கதாநாயகியாக அறிமுகமாகும் ஹிந்தி படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. அங்கே போய் ஹிந்தி தெரியாது என்று சொல்லியிருக்க மாட்டார், ஹிந்தியில்தான் பேசியிருப்பார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *