இன்றைய தெலுங்கு அயலான் வெளியீட்டில் சிக்கல் | Todays release of Telugu Ayalan is in trouble
[ad_1]
தெலுங்கில் இன்று வெளியாகும் ‘அயலான்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது
26 ஜனவரி, 2024 – 13:04 IST
ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படம் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் தெலுங்கு படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ரிலீஸ் தள்ளிப்போய் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்று வெளியாக வேண்டிய படம் சட்டச் சிக்கல்களால் வெளியாகவில்லை. இன்றைய காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரச்சனை தீர்ந்த பிறகே படம் வெளியாகும் என்கிறார்கள். வங்கிகள், நீதிமன்றங்களுக்கு இன்று விடுமுறை என்பதால் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் அடுத்த காட்சிகளாவது படம் வெளியாகுமா என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
[ad_2]