இயக்குநர் கோகுலுடன் கைகோக்கும் விஷ்ணு விஷால்!
[ad_1]
சென்னை: கோகுல் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இடுத்துத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோகுல். அவரது இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சிங்கப்பூர் சலூன்’ இப்படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். ‘லால் சலாம்’ படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் படம் இது. ‘கட்டா குஸ்தி’ படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படம் அதிக பொருட்செலவில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
[ad_2]