இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்ன தெலுங்கு நடிகர் மோகன் பாபு | Telugu actor Mohan Babu consoled Ilayaraja
[ad_1]
தெலுங்கு நடிகர் மோகன்பாபு இளையராஜாவுக்கு ஆறுதல் கூறினார்
30 ஜனவரி, 2024 – 18:21 IST
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் மோகன்பாபு இன்று இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
கடந்த வாரம் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இளையராஜா தெலுங்கிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், சமூக வலைதளங்களில் அவர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை.
நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு மட்டும் ஆறுதல் கூறினார். இந்நிலையில் மோகன்பாபு தனது மனைவியுடன் இளையராஜாவை சந்தித்து ஆறுதல் கூறினார். “இது அதிர்ச்சியாக இருந்தது. நெஞ்சை பதற வைக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு இளையராஜாவைச் சந்தித்து அவரது மகள் பவதாரிணியின் மறைவுக்கு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்திற்கு கடவுள் பலம் கொடுக்க பிரார்த்திக்கிறேன்” என்று X தளத்தில் கூறியுள்ளார்.
[ad_2]