எனது படங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாது: விஷ்ணு விஷால் | My films do not have a negative impact: Vishnu Vishal
[ad_1]
எனது படங்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது: விஷ்ணு விஷால்
31 ஜனவரி, 2024 – 15:12 IST
விஷ்ணு விஷாலின் முதல் படமான ‘வெண்ணிலா கபடி டீம்’ வெளியாகி 15 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய முதல் படமான ‘வெண்ணிலா கபடி டீம்’ வெளியாகி பதினைந்து வருடங்கள் ஆகிறது. எனது திரையுலகப் பயணம் உற்சாகம் மற்றும் வேடிக்கையாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு ஒரு சிறந்த தொடக்கத்தை தந்ததற்காக எனது இயக்குனர் சுசீந்திரனுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
திரைப்படங்கள் சமூகத்தில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல முயற்சித்தேன். என்னுடைய படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது படங்கள் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதில் பெருமை கொள்கிறேன்.
மனைவி, சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்து வெளிவரவிருக்கும் பல சுவாரஸ்யமான படைப்புகளுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கை உங்களைச் சோதிக்கும் மற்றும் உங்கள் திறன்களுக்கு பல சவால்களைத் தரும், ஆனால் நீங்கள் ஒரு தெளிவான நோக்கத்துடன் விடாமுயற்சியுடன், உங்கள் வேலையில் கவனம் செலுத்தி, வலுவாக இருந்தால், எதுவும் உங்களை வெற்றியைத் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
[ad_2]