cinema

‘ஒன்று அசல்… ஒன்று போலி…’ – விஜய்யின் ‘GOAT’ 2-வது போஸ்டர் எப்படி?

[ad_1]

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நட்பைப் பற்றிய இந்தப் பாடலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்கும் இந்தப் பாடல் படத்தின் தொடக்கப் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (டிச.31) வெளியானது. இந்நிலையில், இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

போஸ்டர் எப்படி? – முழுக்க முழுக்க கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக உள்ளது. 2 விஜய் வித்தியாசமான போஸ்களில் பைக்கில் அமர்ந்து துப்பாக்கியால் சுடுவது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் விஜய் வண்டி ஓட்டும் முகம் நிஜமாகவும், பின்னால் அமர்ந்திருக்கும் விஜய்யின் முகம் போலியாகவும் உள்ளது. பின்னணியில் வேறொருவரின் முகத்துடன் விஜய்யின் தோற்றம் போஸ்டரின் தரத்தை குறைத்துள்ளது. அவசரப்பட்டு தயாரிக்கப்பட்ட போஸ்டர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *