‘கட்டா குஸ்தி’ இயக்குநருடன் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால்!
[ad_1]
சென்னை:’‘கட்ட குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இயக்குனருடன் இணைந்துள்ளார்.
செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2022 டிசம்பரில் வெளியான படம் ‘கட்ட குஸ்தி’. இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரவிதேஜா இணைந்து தயாரித்துள்ளனர். ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த், காளிவெங்கட், ரெடின் கிங்ஸ் லீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் படத்தின் இயக்குனர் செல்ல ஐயாவுடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தையும் அவரே தயாரிக்கிறார். படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
[ad_2]