‘கல்கி 2898’ படத்தில் மிருணாள் தாக்குர்?
[ad_1]
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கல்கி 2898. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாகிறது. இந்த அறிவியல் புனைகதை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 12ம் தேதி தொடங்குகிறது.
மே 9ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் சில முன்னணி நடிகர்கள் கவுரவ வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இதில் துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், டைட்டில் ரோலில் மிருணாள் தாக்கூரும் நடிப்பதாக கூறப்படுகிறது.
[ad_2]