cinema

காதலரை மணக்கிறார் நடிகை சுவாசிகா

[ad_1]

கொச்சின்: மலையாள நடிகை ஸ்வாசிகா தமிழில் கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘லாபர் பந்து’ படத்தில் நடித்துள்ளார். இவர் மாடலும் நடிகருமான பிரேம் ஜேக்கப்பை காதலித்து வந்தார். ‘மனம் போல மாங்கல்யம்’ என்ற மலையாள சின்னத்திரை தொடரில் நடித்தபோது இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரின் சம்மதத்தை அடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 26ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்ய உள்ளனர். வரும் 27ம் தேதி கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *