cinema

“குடிக்க தண்ணீர்கூட இல்லை” – விமான நிலைய ஏரோ பிரிட்ஜில் அடைக்கப்பட்டதாக ராதிகா ஆப்தே ஆவேசம்

[ad_1]

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டார். இது தொடர்பாக தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவு: “நான் இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்லவிருந்தேன். ஆனால் தற்போது காலை 10.15 மணி ஆகியும் இன்னும் விமானம் புறப்படவில்லை. ஆனால், விமானம் புறப்படப்போவதாகக் கூறி, பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் பூட்டினர். பயணிகளில் பலருக்கு குழந்தைகள் உள்ளனர். வயதானவர்களும் உண்டு. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அனைவரும் ஏரோ பிரிட்ஜில் அடைக்கப்பட்டனர். காவலர்கள் கதவைத் திறக்கவில்லை. ஊழியர்களுக்கு கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

நானும் உள்ளே பூட்டப்பட்டிருக்கிறேன். 12 மணி வரை உள்ளேயே இருக்க வேண்டும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் கூட குடிக்கவில்லை. இயற்கை சீற்றங்களுக்கு வழி இல்லை. இந்த வேடிக்கையான பயணத்திற்கு நன்றி.” மேலும், இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்த விமான நிலையத்தின் பெயர் அல்லது பிற தகவல்கள் ராதிகா ஆப்தே வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *