சசிகுமாரின் பான் இந்தியா படம்
[ad_1]
சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அயோதி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு ‘ஃபீரிடும் ஆகஸ்ட் 14’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ‘கழுகு’ சத்ய சிவா இயக்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகிறது. விஜய் கணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராமன் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகை லிஜோ மோல் கதாநாயகியாக நடிக்கிறார். சுதேவ் நாயர், மாளவிகா, போஸ்வெங்கட், எம்.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
90களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரமாண்ட கிராமத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப், கன்னட ஹீரோகிச்சா சுதீப், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
[ad_2]