சந்தியா ராகம் சீரியல் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் மாற்றம் | Sandhya raagam movie not only the serial time but also the heroine has changed
[ad_1]
சந்தியா ராகம் சீரியல் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் மாற்றம்
23 ஜன, 2024 – 13:54 IST
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர தொடர் ‘சந்தியா ராகம்’. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. நேற்று முதல் இந்த நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. தாரா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருப்பதாகவும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த ஒளிபரப்பு தொடங்கியது. இதில் சந்தியா ஜாகர்லமுடி, அந்தரா ஸ்வர்ணகர், ராஜீவ் பரமேஸ்வர், சுர்ஜித் குமார், அக்ஷயராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரம்மா தேவன், என்.பிரியன் இயக்குகிறார்கள்.
[ad_2]