சிறப்பாக நடந்த அர்ஜுன் மகள்-தம்பி ராமையா மகன் நிச்சயதார்த்தம்… இருவீட்டு குடும்பத்தின் புகைப்படம் வெளியானது.. – Newstamila.com – NewsTamila.com
[ad_1]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அர்ஜுன். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இவர் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்று அழைக்கப்படுகிறார். சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் லியோ படத்திலும் ஹரால்ட் தாஸ் வேடத்தில் நடித்தார். நடிகர் அர்ஜுன் கன்னட நடிகை நிவேதிதாவை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, ரஞ்சன் என இரு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா நடிப்பிலும் மாடலிங்கிலும் ஆர்வம் கொண்டவர். ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் விஷாலுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ‘சொல்லி விடவா’ படத்தில் நடித்தார்.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் குடும்பத் தொழிலை கவனித்து வரும் ஐஸ்வர்யா, ரசிகர்கள் மத்தியில் தனக்கிருக்கும் புகழைத் தக்கவைக்க அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும், ஐஸ்வர்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடந்து முடிந்துள்ளது.இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
[ad_2]