சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கலக்கிய ஆண்ட்ரியாவின் பாடல்கள்…! | Andreas songs rocked the Chennai Investors Conference…!
[ad_1]
சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அதிரவைத்த ஆண்ட்ரியாவின் பாடல்கள்…!
09 ஜனவரி, 2024 – 19:32 IST

நடிகை ஆண்ட்ரியா தமிழில் மிஷ்கின் இயக்கிய “பிசாசு 2′ படத்தில் நடித்துள்ளார். சில பிரச்சனைகளால் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. நடிப்பு மட்டுமின்றி, திறமையான பாடகியும் ஆண்ட்ரியா, பல பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகளிலும் பாடுவார்.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. தமிழகத்துக்காக நிறைய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக நடிகை ஆண்ட்ரியாவின் பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
ஸ்டைலான உடையில் ஆண்ட்ரியாவின் அசத்தலான குரலில் “ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி…, யார் ஹீரோ…, ஓ சொல்ரியா மாமா…, ரம்பம்…ஆரம்பம்… போன்ற பாடல்களை பாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். பாடுவதைத் தவிர, பாடிக்கொண்டே நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார் ஆண்ட்ரியா.
[ad_2]