செல்ஃபி எடுக்கச் சென்ற ரசிகன்… தப்பிய சிவா… நீதான் தைரியசாலி… நில்லு.. வந்து போகும் நெட்டிசன்கள்…!! – NewsTamila.com
[ad_1]
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர் குறுகிய காலத்தில் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். இந்நிலையில் இசையமைப்பாளர் இமான் கூறிய குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு சொல்ல முடியாத நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டார், அவரின் பேச்சு வைரலாக பரவிய நிலையில், அதற்கு சிவா மறுப்பு தெரிவிக்காமல், “நான் ஏன் பொய்யை விளக்க வேண்டும்” என்று ஒரே வார்த்தையில் முடித்தார்.
இவர் நடித்த மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள அவரது அயலான் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
ஒரு வைரலான வீடியோவில், சிவகார்த்திகேயன் சில குடும்ப நிகழ்ச்சிகளுக்காக தனது உறவினர் வீட்டிற்கு செல்கிறார். அவருடன் செல்ஃபி எடுக்குமாறு ரசிகர் ஒருவர் கேட்டதாக தெரிகிறது. ஆனால் வேண்டாம் என்பது போல் கையை அசைத்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் வீட்டுக்குள் செல்கிறார். ஆனால் இந்த வீடியோவை பார்த்த சிலர் செல்ஃபி எடுத்து ரசிகரிடம் கை அசைத்ததாக கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்று தெரியவில்லை.
[ad_2]