cinema

சொந்தக் காதல் கதையை படமாக்கிய ஜெய் ஆகாஷ்

[ad_1]

சென்னை: ‘மாமரம்’ படத்தில் ஜெய் ஆகாஷ், கிகி வாலஸ், காதல் சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெய் ஆகாஷ் இயக்குகிறார். பாடல்களுக்கு நந்தா இசையமைத்துள்ளார். சதீஷ் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார். பால் பாண்டியின் ஒளிப்பதிவு. ஏ கியூப் மூவிஸ் ஆப் தயாரித்துள்ள இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஜெய் ஆகாஷ் கூறும்போது, ​​“இந்தப் படம் மேக்கிங்கில் ஒரு சாதனை. இந்தப் படம் என்னுடைய சொந்த காதல் கதை. அதில் 20 சதவீதத்தை மட்டுமே சினிமாவுக்காக மாற்றியுள்ளேன். நிஜத்தில் என் காதலி பணத்துக்காக என்னிடமிருந்து பிரிந்தாலும், இந்தக் கதையில் அதை நேர்மறையாக வைத்திருக்கிறேன்.

மாமரம் என்ற தலைப்பை ஏன் வைத்தோம் என்று டிரைலரைப் பார்த்தால் புரியும். இந்த படம் 2012ல் துவங்கியது.கதாநாயகனின் 25 வயது முதல் 40 வயது வரை நடக்கும் கதை. அதனால் இளமையில் அந்த கேரக்டரில் நடித்தேன். 10 வருடங்களுக்கு பிறகு நடுத்தர வயது கேரக்டரில் நடித்துள்ளேன்” என்றார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *