ஜீவாவின் குழப்பத்தை போக்கிய மம்முட்டியின் விளக்கம் | Mammootty explanation clears Jeeva confusion
[ad_1]
மம்முட்டியின் விளக்கம் ஜீவாவின் குழப்பத்தை போக்குகிறது
02 பிப், 2024 – 20:04 IST
நடிகர் ஜீவா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் யாத்ரா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து யாத்ரா என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.
ராஜசேகர் ரெட்டியாக நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமாக யாத்ரா 2 உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மம்முட்டியும் நடித்திருந்தாலும், ராஜசேகர் ரெட்டியின் மகனும் ஆந்திராவின் தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதில் ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜீவா கூறுகையில், “மம்முட்டி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அரசியல் படத்தில் நடித்தால் நடிகருக்கு பாதிப்பு ஏற்படுமா என்று குழம்பினேன். ஷூட்டிங்கில் இதுபற்றி மம்முட்டியிடம் கேட்டபோது, எந்தப் பிரச்னையும் வராது.. நாம் அனைவரும் நடிகர்கள்.. கொடுத்த வேடத்தில் நடிக்கிறோம். அவ்வளவுதான் என்று சொல்லி என் குழப்பத்தை போக்கினார். அவருடன் நடிக்கும் ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து பல புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என்றார் ஜீவா.
[ad_2]