cinema

டீப்ஃபேக் கால் நானும் பாதிக்கப்பட்டேன்: சன்னி லியோன்

[ad_1]

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்களின் போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், ஆலியா பட், கஜோல் உள்ளிட்ட சில நடிகைகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன், டீப்ஃபேக் தொழில்நுட்பத்தால் தானும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் பேசுகையில், “பலர் நினைப்பது போல் இது சமீபகால பிரச்னை இல்லை. நீண்டகால அச்சுறுத்தல். எனக்கும் அதேதான் நடந்தது. ஆனால் நான் அதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. அது என்னை உளவியல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிக்க விடவில்லை. ஆனால் இதனால் பிரச்சனைகளை சந்திக்கும் இளம்பெண்களும் உள்ளனர். அவர்கள் தவறு செய்யவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்று நடந்தால், சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும்,” என்றார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *