தனுஷ் 51வது பட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | The shooting of Dhanushs 51st film began with a pooja
[ad_1]
தனுஷின் 51வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
18 ஜனவரி, 2024 – 13:32 IST
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ளது. அடுத்து தனது 50வது படத்தை இயக்கி நடித்தார். தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன.18) ஐதராபாத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக தனுஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றார்.
[ad_2]