cinema

‘தனுஷ் 51’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடக்கம்

[ad_1]

ஹைதராபாத்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம்.கேப்டன் மில்லர்இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து தனுஷின் 51வது படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இதில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் இசையமைப்பாளரை படக்குழு அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். நாகார்ஜுனாவும், ராஷ்மிகாவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *