தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் இளம் கன்னட நடிகை | Young Kannada actress to debut in Telugu after Tamil
[ad_1]
தமிழுக்கு பிறகு தெலுங்கில் அறிமுகமாகும் இளம் கன்னட நடிகை
23 ஜனவரி, 2024 – 18:10 IST
‘சப்த சகரதாச்சி எலோ’ என்ற கன்னட படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ருக்மணி வசந்த். தற்போது தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதனையடுத்து ருக்மணி வசந்த் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனுதீப் இயக்கத்தில் நடிகர் ரவிதேஜா நடிக்கும் புதிய படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர சில தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
[ad_2]