திருப்பதியில் தனுஷ் பட ஷூட்டிங்: பக்தர்கள் அவதி
[ad_1]
சென்னை: நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராமமோகன் ராவ் மற்றும் சுனில் சரங்க் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இதை நேற்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை படம் பிடிக்க திருப்பதி போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
கருடன் சிலை அமைந்துள்ள திருமலைக்கு அலிபிரி நுழைவு வாயில் அருகே நேற்று படப்பிடிப்பு நடந்தது. இதனால் போக்குவரத்தை போலீசார் திருப்பிவிட்டனர். இதனால் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பல வேன்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் கூட அலிபிரி வழியாக திருமலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட நேரம் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர்
[ad_2]