திருமணத்தால் திறமை போய்விடாது – பாவனா | Talent does not go away with marriage – Bhavana
[ad_1]
திருமணத்தால் திறமை குறையாது – பாவனா
18 ஜனவரி, 2024 – 18:44 IST
பாவனா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் “சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல்” உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இடையில் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் நடிப்பிலிருந்து விலகினார். அதிலிருந்து மீண்டு 2018ல் நவீனை திருமணம் செய்துகொண்டார்.தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “15 வயதில் நடிகையானேன். திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. இதற்கு நேர்மாறாக, திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒருவருடைய திறமை திருமணத்தோடு போய்விடாது. இதற்காக நான் ஏன் நடிப்பதை நிறுத்த வேண்டும்?”
[ad_2]