‘துப்பறிவாளன் 2’ லொகேஷன்: லண்டன் செல்கிறார் விஷால்
[ad_1]
சென்னை: ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் பிறகு துப்பறிவாளன் 2 படத்தை இயக்க உள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘துப்பறிவாளன்’. 2017ல் வெளியான இதன் 2ம் பாகம் சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடித்துள்ளனர். லண்டனில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மிஷ்கினை படத்திலிருந்து நீக்குவதாக படத்தின் தயாரிப்பாளர் விஷால் அறிவித்தார். பின்னர் ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறினார்.
இந்நிலையில் இந்த படத்தின் பணிகளை விஷால் தொடங்கவுள்ளார். இந்தப் படத்துக்காக லொகேஷன் ஸ்கவுட்டிங் செய்ய வரும் 1ம் தேதி லண்டன் செல்கிறார்.
[ad_2]