தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண் விருது? | Padma Vibhushan award for Telugu actor Chiranjeevi?
[ad_1]
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது?
18 ஜனவரி, 2024 – 11:46 IST
தெலுங்கு சினிமாவின் மூத்த ஹீரோ சிரஞ்சீவி. தமிழில் ரஜினிகாந்தின் ‘ரணுவ வீரன்’ படத்தில் வில்லனாகவும், பாலச்சந்தரின் ‘47 நாட்கள்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் படித்த சிரஞ்சீவி, பின்னர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இப்போதும் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
பிரஜா ராஜ்யம் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி, பின்னர் அந்த கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து எம்பி தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆனதோடு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அறிவிக்கப்படும் மத்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் 2006ல் பத்ம பூஷன் விருதை சிரஞ்சீவி பெற்றார்.2011ல் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
[ad_2]