cinema

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது: திரையுலகினர் வாழ்த்து

[ad_1]

சென்னை: பத்ம விபூஷன் விருது பெற்ற நடிகர் சிரஞ்சீவிக்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைச் சேவை போன்ற பல்வேறு பிரிவுகளிலும் துறைகளிலும் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தையொட்டி 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமணியம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி.நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ராஜமௌலி: இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதை வென்றுள்ள சிரஞ்சீவிக்கு வாழ்த்துகள், அவரது பயணம் பல தலைமுறைகளுக்கு உத்வேகமாக அமையும் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரவி தேஜா: “பத்மவிபூஷன் மாஸ்டர் சிரஞ்சீவி. வாழ்த்துக்கள் அண்ணா. லவ் யூ” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஜூனியர் என்டிஆர்: “வெங்கையா நாயுடு மற்றும் சிரஞ்சீவி இருவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் பத்ம விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *