நடிகர் சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை
[ad_1]
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான். கடந்த ஆண்டு வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராவணனாக நடித்தார். இப்போது ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிக்கும் ‘தேவரா’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பின் போது ஏற்கனவே காயம் அடைந்த இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மும்பை கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேல் கை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
[ad_2]