cinema

நடிகர் நாசர் வீட்டில் திடீர் மரணம்.. பெரும் இழப்பால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.. – Tamizhanmedia.net – NewsTamila.com

[ad_1]

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்புக்காக எதையும் செய்யத் துணியும் நடிகர் நாசர். எந்த கேரக்டரை கொடுத்தாலும் தன் நடிப்பால் உயிர் கொடுக்கும் மேஜிக். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்களைப் போலவே நாசரும் இயக்குனர் கே.பாலசந்தரின் கண்டுபிடிப்பு. கல்யாண அகதிகள் படத்தின் மூலம் நாசரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஒல்லியான தேகம், குடிகாரக் கணவன், சாந்த முகத்துடன் நடித்த நாசர் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞனாக வருவார் என்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து தேவர் மகன், குருதிப்புனல், பாம்பே போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு தனித்துவமான வில்லன் நடிகரை அறிமுகப்படுத்தியது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என மொத்தம் எட்டு இந்திய மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமையான நடிகரான நாசர், இந்தியாவின் பல மொழிகளில் நடித்து இன்றுவரை தனித்துவமிக்க சிறந்த நடிகராக வலம் வருகிறார். இப்போதும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நாசரின் வீட்டில் இன்று மரணம் ஏற்பட்டது.

அவரது 95 வயதான தந்தை மெகபூப் பாஷா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு குறித்து கேள்விப்பட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *