நிலநடுக்கத்தால் அதிர்ச்சி: ஜப்பானில் இருந்து திரும்பிய ஜூனியர் என்டிஆர் உருக்கம்
[ad_1]
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 03 ஜனவரி, 2024 05:49 AM
வெளியிடப்பட்டது: 03 ஜனவரி 2024 05:49 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 03 ஜனவரி 2024 05:49 AM

ஹைதராபாத்: ஜப்பானில் உள்ள இஷிகாவா, நிகிதா உள்ளிட்ட சில மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஜப்பான் சென்ற ‘ஆர்ஆர்ஆர்’ நடிகர் ஜூனியர் என்டிஆர் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜூனியர் என்டிஆர், “நான் ஜப்பானில் இருந்து இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்பினேன். அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்” என்றார்.
சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு இந்து தமிழ் திசை வாட்ஸ்அப் சேனலைப் பின்தொடரவும்…
எங்களை பின்தொடரவும்
தவறவிடாதீர்கள்!
[ad_2]