cinema

பான் இந்தியா படமாக உருவாகும் ‘சர்தார் 2’

[ad_1]

சென்னை: கார்த்தி, ராஷி கண்ணா, லைலா நடித்துள்ள படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, 2ம் பாகம் உருவாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘சர்தார் 2’ படத்திற்கான பூஜை பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தப் படம் கார்த்தியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இதில் பிற மொழி நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி தற்போது பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மதுரை அருகே நடந்து வருகிறது. நாணல் குமாரசாமி இயக்கும் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *