புற்றுநோயில் இருந்து மீண்ட 4500 பேருக்கு லியோ படம். – தமிழன்மீடியா.நெட் – NewsTamila.com
[ad_1]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்தார். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அதையடுத்து கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பிரியா ஆனந்த், மடோனா ஜெபாஸ்டின் மற்றும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பற்றி பெரும்பாலானோர் நேர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதாவது படத்தில் சண்டைக்காட்சிகள் இழுபறியாக இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும், படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினர், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 4500 பேருக்கு விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கான இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. டிக்கெட் தவிர, உணவு கூப்பன்களும் அதனுடன் வழங்கப்படுகின்றன. பில்ரோத் மருத்துவமனையின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
[ad_2]