மகேஷ் பாபு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை | Indonesian actress paired with Mahesh Babu
[ad_1]
மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக இந்தோனேசிய நடிகை
13 ஜனவரி, 2024 – 13:18 IST

RRR படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, உலக அளவில் அங்கீகாரம் பெற்ற எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகவுள்ளது. புதையல் தேடும் ‘இந்தியானா ஜோன்ஸ்’ பாணியில் சாகச ஃபேண்டஸி படமாக இது இருக்கும். இதில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் 4 பாகங்களாக தயாராகிறது. திரைக்கதை உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை செல்சியா இஸ்லான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் அவருக்கு டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
[ad_2]