cinema

“மலிவான விளம்பர உத்தி” – பூனம் பாண்டேவை சாடிய திரை பிரபலங்கள் 

[ad_1]

மும்பை: புற்றுநோயால் இறந்துவிட்டதாக வீடியோ வெளியிட்ட நடிகை பூனம் பாண்டே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியானது. அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி வெளியானதும், அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று (பிப்ரவரி 03) பூனம் பாண்டேஅவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேசிய அவர், “நான் உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நான் இறக்கவில்லை” என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தொடர்ந்து, “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றிய உரையாடலை உருவாக்குவதே எனது நோக்கம். அதற்காகத்தான் நான் இறந்தேன் என்று சொன்னேன். “மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது.”

பூனம் பாண்டேவின் வியூகம் சமூக வலைதளங்களில் பாராட்டப்படவில்லை. அவரது மறைவுச் செய்தி கேட்டு வருந்திய பலரும் அவரை வசைபாடினர். இந்த வரிசையில் பல பாலிவுட் பிரபலங்களும் இணைந்துள்ளனர். நடிகைகள் மந்திரா பேடி, பிபாஷா பாசு மற்றும் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் பூனம் பாண்டேயின் செயலை விமர்சித்துள்ளனர்.

விவேக் அக்னிஹோத்ரி: இது உண்மையில் Hatterfly என்ற நிறுவனத்தின் விளம்பரம். இது எவ்வளவு மோசமானது?

பிபாஷா பாசு: இது மோசமான நடவடிக்கை மட்டுமல்ல, இதற்குப் பின்னால் உள்ள PR குழு வெட்கப்பட வேண்டும்.

மந்திரா பேடி: அந்த முட்டாள் பெண்ணுக்கு ஏற்கனவே கிடைத்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டாம். ஆனால் இது மிகவும் பரிதாபகரமான, மலிவான மற்றும் இழிவான விளம்பர ஸ்டண்ட். அவர் புறக்கணிக்கப்பட வேண்டும்.

ஆர்த்தி சிங்: அருவருப்பு… இது விழிப்புணர்வு அல்ல. நான் பிறந்தபோதே என் தாயை புற்றுநோயால் இழந்தேன். அதே புற்றுநோயால் என் தந்தையை இழந்தேன். இதை ஏற்க முடியாது. அனைவரின் உணர்வுகளுடனும் விளையாடியுள்ளீர்கள். மனிதர்கள் மிகவும் கீழ்நிலையில் தள்ளப்படுவது வெட்கக்கேடானது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது.

தாஹிரா காஷ்யப்: மிக மிக கேவலமான செயலை இன்று பார்த்தேன். நான் கோபம், அதிர்ச்சி மற்றும் அவநம்பிக்கை போன்ற உணர்வுகளுக்கு இடையே ஊசலாடுகிறேன். நாம் என்னவாகிறோம்? இந்த மோசமான விளம்பரத்தால் நான் மிகவும் விரக்தியடைந்துள்ளேன். அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதால் அவரது பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *