மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக புதிய படம் அறிவிப்பு | Master Mahendran new movie announced
[ad_1]
மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் அறிவிப்பு
07 பிப்ரவரி, 2024 – 15:56 IST
90கள் மற்றும் 2000களில் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார் போன்ற நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். சமீபத்தில் மாஸ்டர், மாறன், லேபிள் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நவீன் கணேஷ் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக ஜீவிதா நடிக்கிறார். சனா ஸ்டுடியோஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாகி வருகிறது. சார்லி, கும்கி அஸ்வின், ஷாலக்போவது யாரு பிரேமா சரத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
[ad_2]