cinema

முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிர்ணா

[ad_1]

சென்னை: தமிழில், மலையாள நடிகை மிர்னா, பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை, ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ‘பிறந்த குறி’ படத்தில் நடிக்கிறார். இதில் ஏழு மாத கர்ப்பிணியாக நடிக்கிறார். விக்ரம் ஸ்ரீதரன் இயக்கும் இந்தப் படத்தில் ஷபீர் கல்லரக்கல் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெனியாக மிர்னா நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு உதய் தங்கவேல்.

படம் பற்றி விக்ரம் ஸ்ரீதரன் பேசுகையில், “இந்தப் படத்தின் கதை ஜெனி என்ற கதாபாத்திரத்தை சுற்றி வருகிறது. அதனால் அந்த வேடத்தில் நடிக்கக்கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தோம். மிர்னா சரியாகப் பொருந்தினார். இயக்குநராகவும், ஹீரோவாகவும் எவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறோமோ, அதே அளவுக்கு மிர்னா கொடுத்திருக்கிறார். இந்த படம் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும்,” என்றார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *