cinema

‘மெட்ராஸ்காரன்’ மூலம் தமிழில் நடிகர் ஷேன் நிகாம் அறிமுகம்!

[ad_1]

சென்னை: மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் ‘மெட்ராஸ்கரன்’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஷேன் நிகம். அவரது ‘இஷ்க்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். ‘மெட்ராஸ்காரன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஜெகதீஸ் தயாரிக்கிறார்.

கதை என்ன? – ஒரு சிறு ஈகோ ஒருவரின் உயிரை எந்த அளவுக்குப் பறிக்கும் என்பதுதான் படம். ஒரு சிறிய சம்பவம் பெரிய பிரச்சனையாக மாறி இருவரின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை த்ரில்லர் பாணியில் படமாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அறிவிப்பு வீடியோ:



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *